பாஜக தீவிரவாதிகளின் கட்சி: பிரதமர் கருத்துக்கு கார்கே பதில்

By KU BUREAU

புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் வாஷிம் நகரில் கடந்த வாரம் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசும்போது, ‘‘மக்களை பிளவுபடுத்துவதன் மூலம் தங்கள் நோக்கத்தை அடைய விரும்பும் நகர்ப்புற நக்சலைட் கும்பலால் காங்கிரஸ் கைப்பற்றப்பட்டுள்ளது. நாம் ஒற்றுமையாக இருந்தால் நாட்டை பிளவுபடுத்தும் தங்கள் நோக்கம் நிறைவேறாது என அவர்கள் நினைக்கின்றனர். நகர்ப்புற நக்சலைட்கள் காங்கிரஸ் கட்சியை இயக்குகின்றனர். அக்கட்சி நாட்டை பிளவுபடுத்த விரும்புகிறது’’ என்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது: முற்போக்குவாதிகளை நகர்ப்புற நக்சலைட் என்று அழைக்கின்றனர். இது பிரதமரின் பழக்கம். அவரது கட்சி தீவிரவாதிகள் கட்சி. அவர்கள் அடித்துக் கொலைசெய்கின்றனர். மக்களை தாக்குகின்றனர். தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது சிறுநீர் கழிக்கின்ற னர். பழங்குடியின பெண்களைபாலியல் வன்கொடுமை செய்கின்றனர். இவற்றையெல்லாம் செய்பவர்களை அவர்கள் ஆதரிக்கின்றனர். பிறகு மற்றவர்களை அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பிரதமர் மோடிக்கு இதைச் சொல்ல உரிமை இல்லை. எங்கெல்லாம் அவர்களின் அரசுஆட்சியில் உள்ளதோ அங்கெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள், குறிப்பாக பழங்குடியினருக்கு எதிராக அட்டூழியங்கள் நடக்கின்றன.

பிறகு அட்டூழியங்கள் பற்றி பிரதமர் பேசுகிறார். இது உங்கள் அரசு, உங்களால் அதை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE