ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதி: வதந்திகள் குறித்து அவரே வெளியிட்ட அறிக்கை!

By KU BUREAU

மும்பை: இரத்த அழுத்த பிரச்சினை காரணமாக ரத்தன் டாடா இன்று மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தனது உடல்நிலை குறித்து இன்ஸ்டாகிராமில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தனது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு பதிலளிக்கும் விதமாக சமூக வலைதளத்தில் ரத்தன் டாடா(86) அளித்துள்ள பதிலில், "எனது உடல்நிலை குறித்து சமீபத்தில் பரவி வரும் வதந்திகளை நான் அறிவேன். மேலும் இந்த தகவல்கள் ஆதாரமற்றவை என்று அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். எனது வயது மற்றும் தொடர்புடைய மருத்துவ நிலைமைகள் காரணமாக நான் தற்போது மருத்துவ பரிசோதனை செய்து வருகிறேன். நான் நல்ல மனநிலையுடன் இருக்கிறேன். என் உடல் நிலை குறித்து பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்

ரத்தன் டாடா 1991 முதல் 2012 வரை மற்றும் 2016 முதல் 2017 வரை இரண்டு முறை உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமக் குழுமத்தின் தலைவராக இருந்தார். அவர் டாடா குழும நிறுவனத்தின் அன்றாடப் பணிகளில் இருந்து விலகியிருந்தாலும், அதன் அறக்கட்டளைகளுக்கு அவர் தொடர்ந்து தலைமை தாங்குகிறார். 2008 இல், அவர் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷண் பெற்றார். அவர் 2000 ஆம் ஆண்டில் மூன்றாவது உயர்ந்த விருதான பத்ம பூஷன் பெற்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE