முதல்வர் இல்லத்தை காலி செய்து கட்சி எம்.பி. இல்லத்தில் குடியேறினார் கேஜ்ரிவால்

By KU BUREAU

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் இருந்த டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த செப். 13-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார்.

அதன் பின்னர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.இதனிடையில், டெல்லி முதல்வர் இல்லத்தை கடந்த ஆண்டு அர்விந்த் கேஜ்ரிவால் அரசு ரூ.45 கோடி செலவில் புதுப்பித்ததாக பாஜக குற்றம்சாட்டியது. இதனால்,முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து முதல்வர் இல்லத்தையும் காலி செய்துவிடுவதாக கேஜ்ரிவால் அறிவித்தார்.

இந்நிலையில், தனது குடும்பத்துடன் இதுவரை வசித்துவந்த டெல்லியின் 6 ஃபிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திலிருந்து வெளியேறி ஃபெரோஷா சாலையில் உள்ளபங்களாவில் கேஜ்ரிவால் நேற்று குடியேறினார். உடன் அவரது பெற்றோர், மனைவி மற்றும் 2 குழந்தைகள் குடிபெயர்ந்தனர். அர்விந்த் கேஜ்ரிவால் குடியேறியுள்ள புதிய இல்லம் ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினர்அசோக் மிட்டலுக்கு ஒதுக்கப்பட்டதாகும். டெல்லியின் ரவிசங்கர் சுக்லா லேனில் உள்ள ஆம் ஆத்மிகட்சி தலைமையகத்துக்கு அருகில் இந்த குடியிருப்பு உள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE