பாதுகாப்பு கோரி மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர்கள் மீண்டும் வேலைநிறுத்தம்

By KU BUREAU

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டும், மருத்துவர்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தியும் நாடுமுழுவதும் மருத்துவர்கள், பயிற்சிமருத்துவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். காலவரையற்ற போராட்டத்தின் மூலம் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

சுகாதார துறை செயலர், கொல்கத்தா போலீஸ் கமிஷனரை பணி இடமாற்றம் செய்ய வேண்டும், பணி செய்யும் இடங்களில் சிசிடிவி, கேமரா உள்பட பணிப் பாதுகாப்புகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்பட 5முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். அவர்களது கோரிக்கைகளை ஏற்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி ஒப்புக்கொண்டார். இதையடுத்து கடந்த மாதம் 21-ம்தேதி முதல் மருத்துவர்கள் பணிக்குதிரும்பினர். ஆனால் போராட்டம் தொடரும் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், மருத்துவர் களுக்கான பாதுகாப்பு அம்சங்களை அரசு ஒப்புக் கொண்டபடிசெயல்படுத்தவில்லை என்று கூறிபயிற்சி மருத்துவர்கள் நேற்றுமுதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்கி யுள்ளனர். தற்போது 52-வது நாளாகஇந்தப் போராட்டம் நடைபெற்று வருவதாக அவர்கள் தெரிவித் துள்ளனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்களில் ஒருவரான அனிகேட் மகதோ கூறும்போது, “பெண்கள், மருத்துவர்கள் பணி செய்யும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைகளை அரசு சரியாக அணுகவில்லை. எனவே, மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.

எங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் மம்தா உறுதி அளித்தார். ஆனால் நேர்மறையான அணுகுமுறையை அவர்கள் தொடங்கவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக எந்த பணியையும் அரசு இதுவரை தொடங்கவில்லை. எனவே, காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்குவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி யில்லை’’ என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE