பசுக்களுக்கு ராஜ்யமாதா அந்தஸ்து: மகாராஷ்டிர மாநில அரசு தீர்மானம்!

By KU BUREAU

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தேசி வகை பசுக்களுக்கு ராஜ்யமாதா அந்தஸ்தை மகாராஷ்டிர அரசு வழங்கியுள்ளது. மாநிலத்தில் ஒரு உயிரினத்திற்கு இப்படி ஒரு அந்தஸ்து வழங்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இந்திய அணில் மகாராஷ்டிராவின் மாநில விலங்காக உள்ளது.

மகாராஷ்டிர மாநில பால்வள மேம்பாட்டுத் துறை இன்று நிறைவேற்றிய அரசுத் தீர்மானத்தில் ராஜ்யமாதா அந்தஸ்து தேசி வகை பசுக்களுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "இந்த பசுக்கள் காமதேனு என்று அழைக்கப்பட்டன. அவை அறிவியல், மத மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை" என்று அரசின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தேசி மாடுகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள அரசின் தீர்மானம், ஒரு மாட்டுக்கு தினசரி ரூ.50 மானியமாக அவற்றின் உரிமையாளர்களுக்கு மாடுகளின் நலனுக்காக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. மனித ஊட்டச்சத்தில் நாட்டு பசும்பாலின் முக்கியத்துவம், ஆயுர்வேத மற்றும் பஞ்சகவ்யா சிகிச்சை மற்றும் இயற்கை விவசாயத்தில் மாட்டு எருவின் பயன்பாடு ஆகியவை மற்ற காரணிகளில் அடங்கும் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் தேவானி, மராத்வாடாவில் லால் கந்தாரி, மேற்கு மகாராஷ்டிராவில் கில்லார், வடக்கு மகாராஷ்டிராவில் டாங்கி மற்றும் விதர்பாவில் கவ்லாவ் போன்ற இடங்களில் தேசி வகை பசுக்கள் உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE