மத்திய அமைச்சரின் ஹாட்ரிக் கனவைத் தட்டிப் பறித்த 26 வயது காங்கிரஸ் வேட்பாளர்.... கர்நாடகாவில் பரபரப்பு!

By கவிதா குமார்

கர்நாடகாவில் உள்ள பிதார் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை இணை அமைச்சர் பகவந்த் குபாவை விட, 26 வயதான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சாகர் காந்த்ரே சுமார் 1,25,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 23 முதல் 26 தொகுதிகளில் வெற்றி பெறும் என நியூஸ் 18 மெகா எக்சிட் ஃபோல் கூறியது. காங்கிரஸ் கட்சிக்கு 3 முதல் 7 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று அந்த கருத்துக்கணிப்பு கூறியது. இன்று 28 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

மக்களவை தேர்தல் 2024

இதில் பாஜக கூட்டணி 15 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 2 தொகுதிகளிலும்,பிறர் 1 தொகுதியிலும் முன்னிலை வக்கின்றனர். காங்கிரஸ் முன்னிலை பெற்ற பிதார் மக்களவைத் தொகுதியில் 18 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இத்தொகுதியில் 22 பேர் போட்டியிட்டனர்.

இன்று காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பிதார் தொகுதியில் 26 வயதான காங்கிரஸ் வேட்பாளர் சாகர் காந்த்ரே முன்னிலை வகித்தார். இத்தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் பகவந்த் குபா போட்டியிடுகிறார்.

மத்திய இணை அமைச்சர் பகவந்த் குபா

தற்போது இவர் மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை இணை அமைச்சராக உள்ளார். அவரை விட சுமார் 1,25,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சாகர் காந்த்ரே முன்னிலையில் உள்ளார். இவர் கர்நாடகா வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரேவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாட்ரிக் வெற்றி பெறலாம் என்று நினைத்த பகவந்த் குபாவின் ஆசையை நிராசையாக்கியுள்ளார் காங்கிரஸ் வேட்பாளர் சாகர் காந்த்ரே.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE