வெப்ப அலை பாதிப்புகளால் 12 பேர் மரணம்... ராஜஸ்தானை வாட்டி வதைக்கும் வெயில்!

By வீரமணி சுந்தரசோழன்

வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் வெப்ப அலையில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் ராஜஸ்தானில் இந்த வாரத்தில் 12 பேர் வெப்ப பக்கவாதத்தால் (heat stroke) உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜாலோரில் நான்கு பேரும், பார்மரில் இரண்டு கூலித் தொழிலாளர்களும் வெப்ப அலை பாதிப்புகளால் நேற்று உயிரிழந்தனர். அப்பகுதியில் நேற்று வெப்பநிலை 48.8 டிகிரி செல்சியஸாக இருந்தது. இந்த ஆண்டு இதுவரை நாட்டில் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த வெப்பநிலை இதுவாகும். அதேபோல ஆல்வார், பில்வாரா, பலோத்ரா மற்றும் ஜெய்சால்மர் ஆகிய இடங்களிலும் கடுமையான வெப்ப அலை காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

ராஜஸ்தானில் இந்த வாரம் ஏற்பட்டுள்ள 12 பேரின் உயிரிழப்புக்கு வெப்ப பக்கவாதம் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், அதற்கான காரணத்தை அதிகாரிகள் இதுவரை கண்டறியவில்லை.

வெப்ப அலை

இதுகுறித்து பேசிய ராஜஸ்தானின் பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரணத் துறை அமைச்சர் கிரோரி லால் மீனா, “பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்கள் அரசாங்கம் நிவாரண உதவியை வழங்கும். புவி வெப்பமடைதல் காரணமாக மக்கள் கவனமாக இருக்கவேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.

பஞ்சாப், ஹரியானா, குஜராத், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தொட்டது.

அதே நேரத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு 'சிவப்பு' எச்சரிக்கையை வெளியிட்டது. மேலும், எல்லா வயதினருக்கும் வெப்ப நோய் மற்றும் வெப்ப பக்கவாதம் ஏற்படுவதற்கான மிக அதிக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்தது.

அடுத்த மூன்று நாட்களில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் பரிசு வென்ற இந்திய குறும்படம்... ரசிகர்கள் வாழ்த்து!

வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி; முன்னாள் பாஜக நிர்வாகி கைது!

அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து எரிவாயு கசிவு; 89 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கட்டுக்கட்டாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்... அதிமுக பிரமுகர் கைது!

ப்ரேக்-அப்... அடுத்த ரிலேஷன்ஷிப்பிற்கு ரெடி... மெளனம் கலைத்த ஸ்ருதிஹாசன்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE