மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்!

By காமதேனு

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே சிந்தியா, உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலமானார்.

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா. இவரது தாயார் மாதவி ராஜே சிந்தியாவுக்கு கடந்த சில நாள்களாக செப்சிஸ் நோயுடன் கூடிய நிமோனியாவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து இம்மாத துவக்கத்தில் அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தாயார் மாதவி ராஜே சிந்தியாவுடன் ஜோதிராதித்யா சிந்தியா

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்த மாதவி ராஜே சிந்தியா, சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.28 மணிக்கு உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள், மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் நடைபெற உள்ளன. நேபாள அரச குடும்பத்தைச் சேர்ந்த மாதவி ராஜே, இரண்டாம் மகாராஜா மாதவராவ் சிந்தியாவை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி அன்று, மூத்த காங்கிரஸ் தலைவர் மாதவ்ராவ் சிந்தியா, உத்தரப் பிரதேசத்தில் உள்ள மெயின்புரி அருகே விமான விபத்தில் உயிரிழந்தார்.

மாதவி ராஜே சிந்தியா பல்வேறு தொண்டு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். கல்வி மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் அவர் 24 அறக்கட்டளைகளின் தலைவராக இருந்து வந்தார்.

கணவர் மாதவராவ் சிந்தியாவுடன் மாதவி ராஜே சிந்தியா

மேலும், பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் 'சிந்தியாஸ் கன்யா வித்யாலயா' அமைப்பின் ஆளுநர்கள் குழுத் தலைவராகவும் இருந்தார். தனது மறைந்த கணவரின் நினைவாக அரண்மனை அருங்காட்சியகத்தில் 'மகாராஜா மாதவராவ் சிந்தியா -II’ கேலரியையும் அவர் உருவாக்கியிருந்தார்.

மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவின் தாயார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஐபிஎல் சூதாட்ட கும்பல் சிக்கியது: இருவர் கைது; ரூ.2.47 லட்சம் பறிமுதல்!

வாக்களித்துவிட்டு ஊர் திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்... விபத்தில் 6 பேர் பலி!

ஒருதலைக் காதலால் கர்நாடகாவில் அடுத்த பயங்கரம்... வீடு புகுந்து இளம்பெண் குத்திக் கொலை!

காதலனுக்காக வீட்டின் உரிமையாளரை கொலை செய்த இளம்பெண்... பெங்களூருவில் பரபரப்பு!

அதிர்ச்சி... நடிகை ராக்கி சாவந்த் மருத்துவமனையில் அனுமதி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE