பாலியல் வன்கொடுமை தொடர்புடைய கடத்தல் வழக்கில் ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து ஜேடிஎஸ் எம்எல்ஏ- எச்.டி.ரேவண்ணா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
கர்நாடக முன்னாள் அமைச்சரும், ஜேடி(எஸ்) தலைவருமானவர் எச்.டி.ரேவண்ணா. இவரது மகனும், ஹசன் தொகுதி எம்பி-யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து அவற்றை வீடியோவாக பதிவு செய்தார்.
இந்த வீடியோக்கள் அம்மாநிலத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பிரஜ்வல் ரேவண்ணா வெளநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அவரது தந்தை மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இவர்கள் இருவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண் ஒருவரை, எச்.டி.ரேவண்ணா தூண்டுதலின்பேரில் அவரது ஆதரவாளர்கள் கடத்திச் சென்றதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கே.ஆர்.நகர் போலீஸார் எச்.டி.ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கடந்த 4ம் தேதி கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மக்கள் பிரதிநிதிகளுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து எச்.டி.ரேவண்ணா இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து அவர், தனது தந்தையும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவகவுடாவை சந்திக்க அவரது இல்லத்துக்கு சென்றார்.
இதையும் வாசிக்கலாமே...
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அரசு அறிவிப்பு!
கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!
தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!
அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!
கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!