சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன், பவன் கல்யாண் அனைவரும் பாஜகவின் பி டீம்... ராகுல் காந்தி கிண்டல்!

By காமதேனு

டிடிபி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் பாஜகவின் பி டீம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பாவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, "ஜெகன்மோகன் ஆட்சியில் ராஜசேகர ரெட்டியின் நலன், சமூக நீதி, அரசியல் இன்று ஆந்திராவில் இல்லை. மாறாக இன்று ஆந்திராவில் பழிவாங்கும் அரசியல் காணப்படுகிறது. டெல்லியில் ஆந்திராவின் குரலாக ரெட்டி இருந்தார். ஆனால் இன்று பாஜகவின் பி டீம் ஆந்திராவை நடத்துகிறது.

ஜெகன் மோகன் ரெட்டி

பாஜகவின் பி டீம் என்றால் பி ஃபார் பாபு, ஜே ஃபார் ஜெகன் மற்றும் பி ஃபார் பவன். இந்த மூன்று பேரின் ரிமோட் கண்ட்ரோல் நரேந்திர மோடியின் கையில் உள்ளது. ஏனெனில் நரேந்திர மோடியின் கைகளில் சிபிஐ, அமலாக்க இயக்குநரகம், வருமான வரித்துறை உள்ளது" என்று அவர் கூறினார்.

ராகுல் காந்தி

தொடர்ந்து பேசிய அவர், “ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சித்தாந்தம் ஒருபோதும் பாஜகவின் பக்கம் நிற்கக் கூடாது என்பதுதான், இது ஆந்திர மக்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் ஜெகன் மோகன் ரெட்டியால் பாஜகவுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. ஜெகன் பாஜகவுக்கு எதிராக பேச நினைத்தாலும் அவரால் முடியாது என்பது உண்மை. ஏனெனில் அவர் ஊழல் வழக்குகளை எதிர்கொள்கிறார்" என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஆந்திராவில் 25 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் ஒரே கட்டமாக மே 13ம் தேதி நடக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!

இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!

ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!

லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE