இந்தியாவில் இந்துக்களின் சதவீதம் குறைந்துள்ள நிலையில், முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு, மதம் வாரியான மக்கள்தொகை அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவில் பெரும்பான்மையான இந்துக்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
முஸ்லிம்களின் மக்கள்தொகையில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் தொகை அதிகரித்துள்ளது. மேலும் ஜைனர்கள் மற்றும் பார்சிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
1950 மற்றும் 2015-க்கு இடையில், இந்தியாவில் முஸ்லிம் மக்களின் பங்கு 43.15 சதவீதமாக அதிகரித்துள்ளது, கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 5.38 சதவீதம் மற்றும் சீக்கியர்களின் எண்ணிக்கை 6.58 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில், பௌத்தர்களின் எண்ணிக்கையிலும் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் 1950-ல் மொத்த மக்கள் தொகையில் 84 சதவீதமாக இருந்த இந்துக்களின் எண்ணிக்கை 2015-ல் 7.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் அதாவது 65 ஆண்டுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 9.84 சதவீதத்தில் இருந்து 14.09 சதவீதமாக அதிகரித்துள்ளது. நேபாளத்தில் இந்து மக்கள் தொகை நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 3.6 சதவீமாக குறைந்துள்ளது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் மக்கள் தொகையில் அவர்களின் பங்கு அதிகம். பங்களாதேஷின் மக்கள்தொகையில் பெரும்பான்மை முஸ்லிம்களின் பங்கு 18 சதவீதமாகவும், பாகிஸ்தானில் பெரும்பான்மையினர் 3.75 சதவீதமாகவும் உள்ளனர். ஆப்கானிஸ்தானில் பெரும்பான்மை 0.29 சதவீதம் அதிகரித்துள்ளது. 1971-ல் பங்களாதேஷ் உருவாக்கப்பட்ட போதிலும், பாகிஸ்தானில் பெரும்பான்மை மதப் பிரிவான ஹனாபி முஸ்லிம்களின் பங்கு 3.75 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்த முஸ்லிம் மக்கள்தொகையின் பங்கு 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியா மட்டுமின்றி 123 நாடுகளில் பெரும்பான்மை மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வளரும் நாடுகளில் 44 நாடுகளில் மட்டுமே சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வெயில் காலங்களுக்கு எனர்ஜி தரும் சூப்பர் பானங்கள்!
ஒரே பள்ளியில் பயின்ற 13 இரட்டையர்களும் பத்தாம் வகுப்பில் பாஸ்!
லாரியின் உள்ளே ரகசிய அறை வைத்து எடுத்துச் சென்ற ரூ.8 கோடி... ஆந்திராவில் பரபரப்பு!
சென்னை வந்தும் சூர்யாவின் பெற்றோரை பார்க்காத ஜோதிகா... பற்றி எரியும் குடும்பப் பிரச்சினை!
இளையராஜா தன் வழக்கு மூலம் புது டிரெண்டை உருவாக்குகிறார்... வழக்கறிஞர் அதிரடி!