அமித் ஷா போலி வீடியோ வழக்கில் திடீர் பரபரப்பு... காங்கிரஸ் ஐ.டி பிரிவினர் 5 பேர் கைது!

By காமதேனு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது போல போலி வீடியோவை சமூக வலைதளங்களில் பரபரப்பிய வழக்கில் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த 5 பேரை தெலங்கானா போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை நீக்குவது குறித்து தெலங்கானாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசிய பழைய வீடியோவைப் பயன்படுத்தி, எஸ்.சி, எஸ்டி இடஒதுக்கீட்டை நீக்க வேண்டும் என்று மாற்றி அவர் பேசுவது போன்று சமூக வலைதளங்களில் பரபரப்பட்டது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.

ரேவந்த் ரெட்டி

இந்த வழக்குத் தொடர்பாக ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 22 பேருக்கு டெல்லி போலீஸார் நோட்டீஸ் அனுப்பயுள்ளனர்.

அமித் ஷாவின் பேச்சு தொடர்பான போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிய விவகாரத்தில், தெலங்கானா முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். அவரது வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

இந்த வீடியோவை உருவாக்கியதிலோ அல்லது வெளியிட்டதிலோ ரேவந்த் ரெட்டிக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அவர் கூறினார். இந்த வீடியோவைப் பகிர்ந்ததாகக் கூறி பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மேலும் 5 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் போலி வீடியோ தொடர்பாக மாநில காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த 5 பேரை தெலங்கானா போலீஸார் நேற்று கைது செய்தனர். தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி போலீஸ் குழுவும் தெலங்கானாவில்தான் தற்போது மையமிட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

ஆளுநர் மீது இளம்பெண் பாலியல் புகார்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வைத் தவற விட்டவர்களுக்கு குட்நியூஸ்... 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு விரைவில் துணைத்தேர்வு!

நடுரோட்டில் ஓட ஓட விரட்டி மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவன்... பெங்களூருவில் பரபரப்பு!

ஒரே நாளில் 3 பேர் வெயிலில் சுருண்டு விழுந்து உயிரிழப்பு!

வளைகாப்புக்குச் சென்ற போது விபரீதம்... ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE