உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

By காமதேனு

உளவுத் துறை சமீபத்தில் வழங்கிய எச்சரிக்கையைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் மத்திய விசாரணை அமைப்புகளில் முக்கியமானது அமலாக்கத் துறை (இ.டி.). இந்த அமைப்பு நாடு முழுவதும் முக்கிய ஊழல் முறைகேடுகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்புடைய பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகிறது. அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணைக்கு செல்லும் இடங்களில் அவர்கள் மீது எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

அமலாக்கத் துறை

கடந்த ஜனவரி 5ம் தேதி மேற்கு வங்க மாநிலம், சந்தேஷ்காலிக்கு விசாரணை நடத்தச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. வழக்கமாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனைக்கு செல்லும்போது சம்பந்தப்பட்ட பகுதியின் உள்ளூர் காவல் துறை, துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையினர் உடன் செல்வது வழக்கம்.

எனினும் அதையும் மீறி சில நிகழ்வுகளில் அமலாக்கத் துறையினர் தாக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் உளவுத் துறை (ஐ.பி.) சமீபத்தில் மத்திய அரசுக்கு அளித்த அச்சுறுத்தல் மதிப்பீடு அறிக்கையில், அமலாக்கத் துறைக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது. அந்த அறிக்கையின்பேரில் நாடு முழுவதும் உள்ள அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரர்கள் அனுப்ப மத்திய உள் துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மத்திய உள் துறை அமைச்சகம்

உள் துறை அமைச்சக வட்டார தகவல்படி, முதல்கட்டமாக மும்பை, ஜலந்தர், கொல்கத்தா, ஜெய்ப்பூர், ராஞ்சி, ராய்ப்பூர், கொச்சி ஆகிய இடங்களுக்கு சிஐஎஸ்எஃப் வீரர்கள் அனுப்பப்படுகின்றனர். பின்னர் படிப்படியாக அனைத்து அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர். அமலாக்கத் துறைக்கு நாடு முழுவதும் 5 பிராந்தியங்களில் 40 நகரங்களில் 21 மண்டல மற்றும் 18 துணை மண்டல அலுவலகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

ஓரம்போ... ஓரம்போ... மத்திய அமைச்சர் வண்டி வருது... டூவீலரில் வாக்குசேகரிக்கும் ஸ்மிருதி இரானி!

தேர்தல் நேரத்தில் திடீர் அதிர்ச்சி... பாஜக எம்.பி காலமானார்!

தேவகவுடாவுக்கு முற்றும் சிக்கல்; பேரனைத் தொடர்ந்து மகன் மீதும் பாலியல் வழக்குப்பதிவு!

அடுத்த அதிர்ச்சி... ஈரோடு ஸ்டிராங் ரூமில் கேமிரா பழுது; வாக்கு எண்ணிக்கை என்னாகும்?!

பயங்கரம்... கழுத்தை அறுத்து சித்த மருத்துவர், அவரது மனைவி கொடூரக் கொலை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE