அதிரடி! ரூ.806 கோடி ஜிஎஸ்டி பாக்கி தொகையை செலுத்த எல்ஐசிக்கு நோட்டீஸ்!

By காமதேனு

806 கோடி ரூபாய் ஜிஎஸ்டி தொகை மற்றும் வட்டியை செலுத்தும் படி எல்ஐசி நிறுவனத்திற்கு மும்பை மாநில வரித்துறை துணை ஆணையரிடமிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.

2017-18 ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி நிலுவை மற்றும் வட்டி தொகை 806 கோடி ரூபாய் செலுத்துமாறு மும்பை மாநில வரித்துறை துணை ஆணையர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் அபராதத்துடன் 806 கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸால் எல்ஐசியின் செயல்பாடு மற்றும் பண பரிவர்த்தனைகளின் செயல்பாடு நடவடிக்கைகளில் எந்தவித பாதிப்பும் இல்லையென்று எல்ஐசி நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது.

அக்டோபர் 2023ல், 4,993 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு வரி தகராறுகளில் காப்பீட்டாளருக்கு நிவாரணம் வழங்குவதற்கான வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து எல்ஐசி மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது நினைவில் கொள்ளத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


நீதிமன்றத்தில் நாளை பட்டியலிடப்படும் சொத்துக் குவிப்பு வழக்குகள்: தமிழக அமைச்சர்கள் கலக்கம்!

அதிகாலையில் சோகம்... வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் பலி!

குட்நியூஸ்... சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு 27 இடங்களில் இலவச வைஃபை சேவை!

அதிர்ச்சி... ஒன்றரை வயது மகனின் கையை உடைத்த தாய்: காதலனுடன் எஸ்கேப்!

புது வருஷத்தில் தெறிக்க விட்ட சாக்‌ஷி அகர்வால்... வைரலாகும் புகைப்படங்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE