அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

By காமதேனு

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கடலூர், தஞ்சாவூர், நாகை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை அறிவிப்பு

வங்கக்கடலில் கிழக்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (டிச.27) முதல் வரும் ஜன.2-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் லேசான வழக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE