சடசடவென சரிந்து வரும் தங்கத்தின் விலை...மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

By காமதேனு

கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில், இன்று மேலும் சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம்

தங்கம் நேற்று ஒரு கிராம் 5,410 ரூபாய்க்கும், ஒரு சவரன் 43,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக மேலும் குறைந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,390 ரூபாயாகவும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 43,120 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 5,860 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 46,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி

வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.77.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 77,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து விற்பனையாவது இல்லத்தரசிகள் மற்றும் நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE