குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு திரவுபதி உதாரணம்: சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

By காமதேனு

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், அம்மாநிலத்தில் குழந்தை பிறப்பு விகித பிரச்சினைக்கு திரவுபதியை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் மகாயுதி கூட்டணியில் பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) ஆகியவை உள்ளன. இந்நிலையில், புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூரில் நடைபெற்ற மருத்துவர்கள் கூட்டம் ஒன்றில் நேற்று பேசிய அஜித் பவார், “மகாராஷ்டிராவில் சில மாவட்டங்களில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 850 பெண் குழந்தைகள் என்ற அளவில் பிறப்பு விகிதம் உள்ளது.

ஆண் - பெண் பிறப்பு விகிதம்

சில இடங்களில் இது 790 பெண் குழந்தைகள் என்ற அளவிலும் உள்ளன. இது மிகவும் பிரச்சினைக்குரிய விஷயம். இனி வரும் நாட்களில் ‘திரவுபதி’ பற்றி யோசிக்க வேண்டும் போலிருக்கிறது. இதை நகைச்சுவையாக பார்க்காதீர்கள். இல்லையெனில் திரவுபதியை அவமதித்ததாக நாளை நான் விமர்சிக்கப்படுவேன்” என்றார்.

இந்து மத இதிகாசமான மகாபாரதத்தில் திரவுபதி, அர்ஜூனன் உள்ளிட்ட 5 சகோதரர்களுக்கு மனைவியாக இருந்த நிகழ்வு வருகிறது. மகாராஷ்டிரத்தில் ஆண் குழந்தைகளுக்கு சம அளவில் பெண் குழந்தைகள் இல்லாததை திரவுபதியுடன் குறிப்பிட்டு அஜித்பவார் பேசியுள்ளது அவர் கூறியபடியே சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அஜித் பவாரின் இந்த கருத்துக்கு சரத் பவார் என்சிபி-யைச் சேர்ந்த ஜிதேந்திர அவாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “மனதில் விஷம் இருக்கும் போது, அவர் (அஜித் பவார்) வாயிலிருந்து வேறு என்ன வெளிவரும்?

ஜிதேந்திர அவாத்

திருமணங்கள் நடக்காது, கேள்விகள் எழும், பிரச்சினைகள் ஏற்படும் என வேறு மாதிரியாக உதாரணம் கூறியிருக்கலாம். மகாராஷ்டிராவில் பிறப்பு விகிதம் எப்போதும் நிலையாக இருந்ததில்லை. திடீரென திரவுபதி அவரின் நினைவுக்கு வந்ததால் கூறிவிட்டோர். கடந்த காலத்திலும் அஜித்பவார் இதுபோன்று எதையாவது பேசிவிட்டு செல்வார். ஆனால், அதற்கான விலையை சரத் பவார் கொடுக்க வேண்டியிருந்தது.” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

கோவையில் பணப்பட்டுவாடா... கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்!

முதற்கட்ட தேர்தலில் மோதும் 8 மத்திய அமைச்சர்கள்... வெற்றி கிடைக்குமா?

தேர்தல் நேரத்திலும் திகு திகு... சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்... தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு!

பாஜக தலைவரை கடத்திச்சென்ற கிளர்ச்சியாளர்கள்; அருணாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE