மணிப்பூரில் மீண்டும் இணையசேவை... அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர்!

By காமதேனு

கலவரத்தால் 4 மாதங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மீண்டும் இணைய சேவை பயன்பாட்டுக்கு வரும் என்று அம்மாநில முதல்வர் என்.பைரேன் சிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மணிப்பூரில் மே மாதம் முதல் மேதி - குக்கி சமூக மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் இதுவரை 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த மே மாதம் 3-ம் தேதி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. இதனால் கலவரக்காரர்களுக்கு இடையே தொடர்புகள் துண்டிக்கப்பட்டன, கலவரம் படிப்படியாக குறைய தொடங்கியது.

மணிப்பூர் கலவரம்

இந்நிலையில் மணிப்பூர் மாநில முதல்வர் பைரேன் சிங் கலவரத்தால் தடை செய்யப்பட்ட இணைய சேவை இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று அறிவித்துள்ளார். மேலும் இந்தியா-மியான்மர் எல்லையில் இருபுறமும் வசிக்கும் மக்கள் எந்த ஆவணமும் இல்லாமல் இரு நாடுகளுக்குள் 16 கி.மீ. தூரம் செல்ல அனுமதிக்கும் சுதந்திர இயக்க ஆட்சியை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, “மாநிலத்தில் கலவரத்தின்போது போலி செய்திகள் மற்றும் வெறுப்பு பேச்சுகள் இணையத்தில் வேகமாக பரவின. எனவே அதனை கட்டுப்படுத்த இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. தற்போது நிலைமை சீராகி வருவதால் மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE