பரபரப்பு... 2 எம்எல்ஏக்களை கட்சியிலிருந்து நீக்கினார் முதல்வர்!

By காமதேனு

ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தலைவரான நவீன் பட்நாயக், மக்கள் விரோதச் செயல்கள் குற்றச்சாட்டின் கீழ் 2 எம்எல்ஏக்களை இன்று கட்சியில் இருந்து நீக்கினார்.

ஒடிசாவின் கந்தபடா எம்எல்ஏ சவுமியா ரஞ்சன் பட்நாயக், ரெமுனா எம்எல்ஏ சுதன்சு சேகர் பரிடா ஆகிய இருவரும் பிஜேடி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சவுமியா ரஞ்சன், ‘சம்பத்’ என்ற ஒடியா நாளிதழின் உரிமையாளரும் ஆசிரியரும் ஆவார். இவர் ஏற்கெனவே கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இவர் தனது பத்திரிகையில் தனது சொந்த கட்சிக்கு எதிராக 2 தலையங்கங்களை எழுதியிருந்தார்.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

அந்த தலையங்கத்தில் முதல்வரின் தனிச்செயலாளர் வி.கே.பாண்டியன் தனது அதிகாரப்பூர்வ பதவிக்கு அப்பாற்பட்டு செல்வாக்கு செலுத்தி வருவதாக அவர் விமர்சித்திருந்தார். அவர் மீது போலீஸார் வழக்கு தொடர்ந்த நிலையில், தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சொந்தக் கட்சி எம்எல்ஏக்களையே ஒடிசா முதல்வர் கட்சியிலிருந்து நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE