சிவப்பு சீருடை, தலையில் சூட்கேஸ்... சுமைத்தூக்கிய ராகுல் காந்தி; நெகிழ்ந்துபோன தொழிலாளர்கள்!

By காமதேனு

டெல்லி ஆனந்த்விஹார் பகுதியில் சுமைத்தூக்கும் தொழிலாளி உடை அணிந்து, பயணிகளின் உடைமைகளை ராகுல் காந்தி சிறிது தூரம் தூக்கி சென்றார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி சமீப நாட்களாக பொது இடங்களுக்குச் சென்று, டிரைவர், விவசாயிகள், மெக்கானிக்குகள் போன்றோரை சந்தித்து அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பற்றி கேட்டறிந்து வருகிறார்.

ராகுல் காந்தி

இந்தநிலையில், டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில் நிலையத்திற்கு ராகுல் காந்தி திடீரென சென்றார். அப்போது ரயில் நிலையத்தில் பணிபுரியும் சுமைத்தூக்கும் தொழிலாளிகளை ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.

ராகுல் காந்தி

மேலும் சுமைத்தூக்கும் தொழிலாளிகளின் குறைகள், குடும்பச் சூழ்நிலை குறித்து ராகுல் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து சுமைத்தூக்கும் தொழிலாளிகளின் உடையை அணிந்து, பயணிகளின் உடைமைகளை ராகுல் காந்தி சிறிது தூரம் தூக்கிச் சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE