அரசு மருத்துவமனை வாசலில் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்... விரட்டியடித்த 3 டாக்டர்கள் சஸ்பெண்ட்!

By காமதேனு

ராஜஸ்தானில் கர்ப்பிணியை பிரசவத்துக்கு மருத்துவமனையில் அனுமதிக்காத 3 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஜெய்ப்பூர் கன்வாடியா அரசு மருத்துவமனை

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் கன்வாடியா அரசு மருத்துவமனைக்கு கடந்த புதன்கிழமை கர்ப்பிணி ஒருவர், பிரசவ வலியால் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அப்போது அவரை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் அந்த கர்ப்பிணி மருத்துவமனை நுழைவு வாயில் கேட் அருகே குழந்தை பெற்றெடுத்தார். இந்த விவகாரம் அங்குள்ள சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளுக்கு சென்றது.

இதுகுறித்து மருத்துவ கல்வி கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரா சிங் கூறுகையில், "இந்த விஷயம் கவனத்துக்கு வந்த பிறகு, உடனடியாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

சஸ்பெண்ட்

அந்த குழு அளித்த அறிக்கையின் பேரில் மருத்துவர்கள் குசம் சைனி, நேஹா ரஜாவத், மனோஜ் ஆகிய 3 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் அலட்சியமாக செயல்பட்டதற்காக மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேந்திர சிங் தன்வருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.” என்றார்.

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியை பிரசவத்துக்கு அனுமதிக்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE