கடும் பனிப்பொழிவு... சிக்கிமில் சிக்கித் தவித்த 800 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

By காமதேனு

கிழக்கு சிக்கிமின் உயரமான பகுதியில் கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவித்த சுமார் 800 சுற்றுலாப் பயணிகளை இந்திய ராணுவத்தினர் நேற்று மீட்டனர்.

மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள்.

வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் கிழக்குப் பகுதியில் கடும் பனிப்பொழிவில் சுற்றுலாப் பயணிகள் சிக்கித்தவிப்பதாக இந்திய ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவத்தின் திரிசக்தி படைப்பிரிவினர், அந்த இடத்துக்கு சென்று பனிப்பொழிவில் சிக்கித் தவித்த சுமார் 800 சுற்றுலாப் பயணிகளை மீட்டனர். இந்த மீட்பு பணி நேற்று மாலை வரை நடைபெற்றது.

மீட்கப்பட்ட சுற்றுலா பயணிகளில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். அவர்கள் அனைவரும் ராணுவ முகாமுக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு கம்பளி உடை, மருத்துவ உதவிகள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் செய்து தரப்பட்டன.

800 சுற்றுலாப் பயணிகளை தங்க வைப்பதற்கு முகாமில் போதுமான அளவில் இல்லை. இதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் தாங்கள் வசித்த இடத்தை காலி செய்து, சுற்றுலாப் பயணிகளுக்கு அடைக்கலம் தந்து உதவினர். இக்கட்டான நேரத்தில் விரைந்து செயல்பட்டு தங்களை மீட்டு, உரிய உதவிகளைச் செய்துகொடுத்த ராணுவத்தினருக்கு சுற்றுலாப் பயணிகள் நன்றி தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

மக்களவையில் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு பாஸ் கொடுத்தது பாஜக எம்.பி - வெளியானது முதற்கட்ட தகவல்!

பரபரப்பு... அழைப்பு விடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி: நிராகரித்த முதல்வர் ஸ்டாலின்!

வார்த்தைகளை அடக்கவில்லை என்றால்... உதயநிதி ஸ்டாலினை எச்சரிக்கும் தமிழிசை

பாமாயில் ஏற்றிச் சென்ற நார்வே கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்... செங்கடல் பகுதியில் பதற்றம்!

அட... சிவகார்த்திகேயனின் `அயலான்’ ஏலியனுக்கு குரல் கொடுத்தது இந்த நடிகரா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE