பிரதமர் மோடி, அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: முதல்வர் மகன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!

By காமதேனு

பிரமதர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மீது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, கர்நாடகா முதல்வர் சித்தராமையா மகன் யதீந்திர சித்தராமையா மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா

கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனூரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் அம்மாநில முதல்வர் சித்தராமையா மகன் யதீந்திர சித்தராமையா பேசுகையில், “அமித் ஷா குஜராத்தில் கொலை வழக்குகளை எதிர்கொள்கிறார். மேலும் குற்றச் செயல்கள் பின்னணி உள்ளவர். ஆனால் இப்போது, அவர் நாட்டின் உயர் பதவியில் இருக்கிறார்.

வேலையில்லாதவர்களுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்தனர். இப்போது வேலைவாய்ப்பை உருவாக்குவது மத்திய அரசின் பொறுப்பு அல்ல என்கிறார்கள். கருப்புப் பணத்தை மீட்பதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் என்ன நடந்தது? சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்களைக் கூட அவர்கள் வெளியிடவில்லை.

தேர்தல் ஆணையம்

400-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றுவோம் என பாஜக கூறி வருகிறது. 400 இடங்கள் கிடைத்தால் அரசியல் சட்டத்தை மாற்றுவது அவர்களின் ரகசிய செயல்திட்டம். நாட்டின் வரலாற்றில் ஜனநாயக அமைப்பின் கழுத்தை நெரிக்கும் அரசு என்றால் அது மோடியின் அரசுதான்” என்றார்.

யதீந்திர சித்தாரமையாவின் இந்த பேச்சுக்கு கர்நாடக மாநில பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், யதீந்திரா மீது, அம்மாநில பாஜக, தேர்தல் ஆணையத்துக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், "தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள தேர்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) யதீந்திரா சித்தராமையா மீறியுள்ளார். அவரது பேச்சு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மீதான தனிப்பட்ட தாக்குதல். சித்தராமையாவின் பேச்சு முற்றிலும் கண்டிக்கத்தக்கது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!

பெங்களூருவில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... பரபரப்பு!

நடுக்கடலில் பரபரப்பு... கடற்கொள்ளையர்களைச் சுற்றி வளைத்த இந்திய கடற்படை!

கோயில் திருவிழாவில் அதிர்ச்சி... தேர்ச்சக்கரத்தில் சிக்கி ஊர்க்காவல் படை வீரர் பலி!

46 கோடி ரூபாய்க்கு வரி செலுத்துங்கள்... வருமான வரித்துறை நோட்டீஸை பார்த்து கல்லூரி மாணவர் அதிர்ச்சி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE