அனைத்து முனையங்களையும் இணைக்க டெல்லி விமான நிலையத்தில் 2027-ம் ஆண்டுக்குள் ஏர் ரயில்

By KU BUREAU

புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தில் அனைத்து முனையங்களையும் இணைக்கும் வகையில் ஏர் ரயில்போக்குவரத்தை 2027-ம் ஆண்டுக்குள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி விமான நிலையத்தில் 3 முனையங்கள், ஏரோ சிட்டி, கார்கோ சிட்டி என 4 பகுதிகள் உள்ளன. மிகவும் பரபரப்பான டெல்லி விமான நிலையத்துக்கு ஆண்டுக்கு 7 கோடி பயணிகள் வருகின்றனர். இன்னும் 6 முதல்8 ஆண்டுகளில் பயணிகளின் எண்ணிக்கை 13 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமான பயணிகளில் 25 சதவீதம் பேர் தங்கள் பயணத்தை தொடர வேறு முனையங்களுக்கு செல்ல வாகனங்களில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் விமான நிலையத்தின் அனைத்து முனையங்கள் மற்றும் பகுதிகளை இணைக்கும் வகையில் 7.7 கி.மீ தூரத்துக்கு ஏர் ரயில் (ஏபிஎம்) போக்குவரத்தை ஏற்படுத்த டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நாட்டிலேயே முதல் முறை: 2027-ம் ஆண்டுக்குள் டெல்லி விமான நிலையத்தில் ஏர் ரயில் போக்குவரத்து அமைக்கப்படும். இதன் மூலம் விமான பயணிகள் வேறு முனையங்களுக்கு கட்டணமின்றி விரைவாக மாறிச் செல்ல முடியும். இத்திட்டத்துக்கு ரூ.2,000 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின்முதல் ஏர் ரயில் போக்குவரத்தாக இருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE