எங்கே போனார் நேபாள மேயர் மகள்... கோவாவில் இருந்தவர் திடீர் மாயம்!

By சிவசங்கரி

கோவாவுக்கு சுற்றுலா சென்றிருந்த நேபாளத்தை சேர்ந்த மேயரின் மகள் ஆர்த்தி மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன அவரை கடந்த இரண்டு நாட்களாக தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நேபாள மேயர் ட்விட்

நேபாள மேயரின் மகள் ஆர்த்தி ஹமால், கடந்த சில மாதங்களாகவே கோவாவில் தங்கி உள்ளார். இவர் ஓஷோ தியானத்தைப் பின்பற்றுபவர். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு 9.30 மணி அளவில் கோவாவில் உள்ள அஷ்வெம் பாலத்தின் அருகே அவரை கண்டதாக சிலர் தெரிவித்துள்ளனர். அதன் பின் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என ஆர்த்தியின் தோழிகள் அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆர்த்தி தங்கி இருந்த இடம்

இதை அறிந்த ஆர்த்தியின் தந்தையும், நேபாளத்தின் தங்காதி துணை பெருநகரத்தின் மேயருமான கோபால் ஹமால், தனது மகளைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் தனக்கு தகவல் தெரிவிக்கும்படி சமூக ஊடகம் வழியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், ‘எனது மூத்த மகள் ஆர்த்தி, கோவாவில் சில மாதங்களாக ஓஷோ தியானம் செய்து வருகிறார். ஆனால், நேற்று முதல் ஆர்த்தியை தொயர்புகொள்ள முடியவில்லை என அவரது தோழியிடம் இருந்து செய்தி வந்துள்ளது. கோவாவில் வசிப்பவர்கள் எனது மகள் ஆர்த்தியைத் தேடுவதற்கு உதவ வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எனது மகளைத் தேடுவதற்குத் தேவையான உதவிகளை வழங்க, 9794096014/8273538132/ 9389607953 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE