இளம்பெண் மருத்துவர் தற்கொலை... போலீஸாரிடம் சிக்கிய உருக்கமான கடிதம்!

By சிவசங்கரி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இளம்பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியின் பொது மருத்துவத் துறையில், மருத்துவராக பணியாற்றி வந்தவர் அபிராமி பாலகிருஷ்ணன். இவர் பி.டி.சாக்கோ நகரில் உள்ள வாடகை குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், நேற்று மாலை அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலின் பேரில் அவரது வீட்டுக்கு சென்ற போலீஸார், அபிராமியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

தற்கொலை

முதற்கட்ட தகவலில், அவர் நேற்று மதிய இடைவேளைக்கு பின் தனது அறைக்கு வந்து வீட்டை பூட்டி உள்ளே இருந்துள்ளார். வெகுநேரம் ஆகியும் அவர் வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர், தனது படுக்கை அறையில் மயங்கி கிடந்தது தெரிய வந்துள்ளது. பின்னர், டாக்டர் அபிராமியை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து அபிராமி வீட்டுக்கு அருகிலிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து டாக்டர் அபிராமி எழுதிய தற்கொலை கடிதத்தையும் மீட்ட போலீஸார், அவரது அறைக்கு சீல் வைத்துச்சென்றனர்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு டாக்டர் அபிராமி கொல்லம் ராமன்குளங்கராவில் வசிக்கும், டாக்டர் பிரதீஷ் ரகுவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அபிராமியின் கணவர் பிரதீஷ் கொல்கத்தாவில் மருத்துவராக பணியாற்றுகிறார். நாளை தனது கணவரைக் காண கொல்கத்தாவுக்கு செல்லவிருப்பதாக அபிராமி உறவினர்களிடம் கூறியிருந்ததாக போலீஸாரிடம் கூறினர்.

இதையும் வாசிக்கலாமே...
ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE