லோக் ஆயுக்தாவும் கிளம்பியாச்சு... கர்நாடகாவில் 13 மாவட்டங்களில் அதிரடி சோதனை!

By காமதேனு

ஊழல் தடுப்பு அமைப்பான லோக் ஆயுக்தா, கர்நாடகா முழுவதும் 13 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அரசு அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

கர்நாடகா மாநிலத்தில் இன்று காலை முதல் 13 மாவட்டங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள், அரசு அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு, பீதர், ராம்நகர், உத்தர கன்னட மாவட்டங்கள் உள்ளிட்ட மாவட்டங்களில் 60 இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை நடவடிக்கைக்கு 13 காவல் கண்காணிப்பாளர்கள், 12 துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

லோக் ஆயுக்தா சோதனை

லோக் ஆயுக்தா என்பது மாநில அளவில் உள்ள ஒரு அதிகார அமைப்பாகும். இது பொதுமக்களிடமிருந்து பெறப்படும் ஊழல் உள்ளிட்ட புகார்களை விரைவாக தீர்ப்பதற்காக செயல்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரியில், கர்நாடகாவில் உள்ள லோக் ஆயுக்தா 10 ஊழல் வழக்குகள் தொடர்பாக 40 இடங்களில் உள்ள அரசு அதிகாரிகளின் இல்லங்களில் சோதனை நடத்தியது.

துமகூரு, மாண்டியா, சிக்கமகளூரு, மைசூரு, கொப்பல், விஜயநகரம், பல்லாரி, ஹாசன், சாம்ராஜ்நகர் மற்றும் மங்களூரு ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது மீண்டும் சோதனைகள் நடைபெற்று வருவதால் அரசு அதிகாரிகளிடையே பீதியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தமிழகத்தில் பதுங்கலா?... 5 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE