தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிட்ட விவகாரத்தில், பதஞ்சலி ஆயுர்வேத நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் இன்று நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் குணப்படுத்தவே முடியாத நோய்கள், மரபணு நோய்களை தங்களின் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என விளம்பரங்களை வெளியிட்டது.
இதனை அறிந்த இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற்ம், பதஞ்சலி நிறுவனத்தை கடுமையாக எச்சரித்துடன், தவறான விளம்பரங்களை வெளியிட வேண்டாம் என உத்தரவிட்டிருந்தது.
இருப்பினும் கடந்த 4 மாதங்களாக பதஞ்சலி இதுபோன்ற விளம்பரங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்த நிலையில் இந்த வழக்கு கடந்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பதஞ்சலி நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குநரான பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸை உச்சநீதிமன்றம் பிறப்பித்து, மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
ஆனால் இதற்கு பதஞ்சலி தரப்பிலிருந்து எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, இந்த வழக்கை மீண்டும் விசாரித்த உச்சநீதிமன்றம், யோகா குரு ராம்தேவ் மற்றும் அந்நிறுவன நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. இந்நிலையில், தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிட்ட விவகாரத்தில் ஆச்சார்யா பாலகிருஷ்ணா உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், "எதிர்காலத்தில் இதுபோன்ற விளம்பரங்கள் வெளியிடப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறோம். ஆயுர்வேத நிறுவனத்தின் தயாரிப்புகளை உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ இந்த நாட்டின் குடிமக்களை ஊக்குவிப்பதே தங்களின் நோக்கம்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
தமிழகம் முழுவதும் பரபரப்பு... ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டு!
பூட்டு நகரை கோட்டை விட்ட அதிமுக... கொந்தளிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்!
32 தமிழக மீனவர்களை விடாமல் விரட்டி கைது செய்த இலங்கை கடற்படை... படகுகளும் பறிமுதல்!
குரூப் 2 நேர்முகத்தேர்வுக்கு தயாராக இருங்க... அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!