பெங்களூரு மட்டுமல்ல சென்னை உட்பட இந்தியாவின் மேலும் 5 நகரங்கள்... தண்ணீர் பஞ்சத்தால் விரைவில் நரகமாகும்!

By காமதேனு

பெங்களூரின் நடப்பு சூழல் மட்டுமல்ல, இந்தியாவின் மேலும் பல நகரங்கள் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி கடுமையாக தவிக்க இருக்கின்றன. அவற்றில் சென்னையும் ஒன்று.

தண்ணீருக்காக பெங்களூரு நகரம் தவியாய் தவித்து வருகிறது. தேசத்தின் தகவல்தொழில்நுட்பத் துறையின் தலைநகராக சர்வதேச பெருமை வாய்ந்த பெங்களூருவின் மக்கள் இன்று குடிநீருக்காக அலைகிறார்கள். இந்த அவலப் போக்கு பெங்களூருக்கான போராட்டம் மட்டுமல்ல.

இந்தியா நெடுக ஏராளமான நகரங்கள் கடும் தண்ணீர் பஞ்சத்தை விரைவில் எதிர்கொள்ள இருக்கின்றன. ஏனைய பகுதிகளில் வாழ்வோரின் கனவு நகராக விளங்கும் இந்த நகரங்கள், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விரைந்து நரகமாக அவதாரம் எடுக்க இருக்கின்றன. அவற்றில் முதன்மையான 5 நகரங்கள் இங்கே:

பெங்களூருவில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம்

டெல்லி: தேசத்தின் தலைநகரான டெல்லி அதிகரிக்கும் காற்று மாசுபாடு காரணமாக உலகளவில் முதன்மை பெற்றிருக்கிறது. டெல்லியின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கும் இந்த காற்று மாசுபாடுடன் தண்ணீர் பஞ்சமும் கைகோத்து வருகிறது. கோடைதோறும் டெல்லியின் பல பகுதிகள் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கின்றன. யமுனை மாசுபடுவதும், நிலத்தடி நீர் குறைவதும் ஒரே நேரத்தில் அதிகரித்து வருகின்றன. டெல்லி ஜல் போர்டு வழங்கும் நீரில் பாதிக்கும் மேலாக மாசுற்ற யமுனையிலிருந்து பெறப்படுகிறது. கணிசமானவை மட்டுமே நிலத்தடி நீரில் இருந்து பூர்த்தியாகிறது. நிலத்தடி நீர் குறைபாட்டுக்கு நிவாரணம் தேடுவதும், நீரின் தரத்தை மேம்படுத்துவதும் டெல்லியின் தலையாய பிரச்சினைகளில் ஒன்றாக சேர்ந்திருக்கிறது.

மும்பை: அதிகரித்து வரும் தண்ணீர் தேவை, சீரற்ற மழைப்பொழிவு மற்றும் நீர் ஆதாரங்கள் குறைந்து வருவதன் காரணத்தால் தேசத்தின் பொருளாதார தலைநகரம் பெரும் தவிப்புக்கு ஆளாகி இருக்கிறது. விரைவான நகரமயமாக்கல், போதிய உள்கட்டமைப்பு மற்றும் திறமையற்ற நீர் மேலாண்மை நடைமுறைகள் ஆகியவை மும்பை மாநகரின் தண்ணீர் பஞ்சத்தை மேலும் அதிகரிக்கின்றன. நகருக்கு நீர் வழங்கும் ஏழு ஏரிகளில் நீர் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மாற்று நீர் ஆதாரங்களை அரசு நீண்ட காலமாக தேடி வருகிறது.

சென்னை: கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. ஆனபோதும் மிதமிஞ்சிய மழைப்பொழிவு அதற்கு இணையாக தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் ஆகியவையும் சென்னையின் விநோதங்களில் ஒன்றாக சேர்ந்திருக்கிறது. அன்றாடம் சுமார் 10 மில்லியன் லிட்டர் தண்ணீரை போக்குவரத்து மூலம் பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் உலகளவில் தண்ணீருக்காகத் தவிக்கும் பெரும் நகரங்களின் பட்டியலில் சென்னை சேர்ந்திருக்கிறது. அண்மை ஆண்டுகளாக சென்னை மாநகரம் குறிப்பிடத்தக்க மழைபொழிவை கண்டபோதும், தொழில்மயமாக்கல், நகர மயமாக்கல் உள்ளிட்டவை நீரின் தேவையை மேலும் அதிகரித்து வருகின்றன.

தண்ணீர் தட்டுப்பாடு

லக்னோ: உத்தரபிரதேசத்தின் தலைநகரான லக்னோ ஏற்கனவே தண்ணீர் பஞ்சத்தை அடையாளம் கண்டிருக்கிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எழுப்பிய எச்சரிக்கை மணி கண்டுகொள்ளப்படாததில், லக்னோவில் தண்ணீர் தட்டுப்பாடு பூதாகரமாக எழ இருக்கிறது. பக்ரா நங்கல் அணையின் கொள்ளளவின் மூன்றில் ஒரு பங்கு அளவிலான நிலத்தடி நீரை லக்னோவாசிகள் தங்களது ஆண்டுத் தேவைக்கு உறிஞ்சி வருகிறார்கள். ஒழுங்கற்ற மழைப்பொழிவு, வறண்டு கிடக்கும் கோமதி மற்றும் கிளை நதிகள் மற்றும் நகரமயமாக்கல் ஆகியவை, நீர் ஆதாரங்களுக்கு மேலும் அழுத்தம் தருவதால், லக்னோ மோசமான எதிர்காலத்தை நோக்கி விரைந்து வருகிறது.

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகரான ஜெய்ப்பூர் அதன் பாரம்பரிய அடையாளங்களுக்கு போட்டியாய் வறட்சியையும் பெற இருக்கிறது. பெருகும் மக்கள்தொகை மற்றும் வளரும் தொழில்மயமாக்கல் ஆகியவை நகரின் நீர்த் தேவையை தீவிரப்படுத்தியுள்ளன. நீண்ட காலமாக ஜெய்ப்பூரின் நீர் ஆதாரமாக ராம்கர் அணை விளங்கி வந்தது. இருப்பினும், 1980களின் பிற்பகுதியிலும் 1990களின் முற்பகுதியிலும், நீர் ஆதாரத்தில் அணையின் நம்பகத்தன்மை குறைந்து போனது. இதனால் நிலத்தடி நீரை மட்டுமே முழுமையாக நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அமெரிக்காவை அதிரவைக்கும் செக்ஸ் ஸ்டிரைக்... மனைவிகள் போராட்டத்தால் கதறும் கணவர்கள்

மகனுக்கு சீட் இல்லை... திமுக தலைமை மீது பொன்முடி அதிருப்தி!

சுயேச்சைகள் ஆட்டம் ஆரம்பம்... சவப்பெட்டியுடன் வேட்புமனு தாக்கலுக்கு வந்த வேட்பாளர்!

எலெக்‌ஷன் நேரத்துல மூச்சு விடக்கூட பயமா இருக்கு... நடிகர் ரஜினிகாந்த் மிரட்சி!

களமிறங்கும் விஜயகாந்த் குடும்பம்... விருதுநகரில் விஜய பிரபாகரன்; கள்ளக்குறிச்சியில் சுதீஷ்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE