காலிஸ்தான் பிரிவினைவாதி தொடுத்த வழக்கில் அமெரிக்காவின் சம்மனை நிராகரித்தது இந்தியா

By KU BUREAU

புதுடெல்லி: காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் தொடுத்த வழக்கில் இந்திய அரசுக்கு அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாதியாக அறியப்படும் குர்பத்வந்த் சிங் பன்னுன், அமெரிக்கா மற்றும் கனடா என இரண்டு நாடுகளிலும் குடியுரிமையைப் பெற்றவர். அவரை கடந்தாண்டு கொலை செய்ய இந்திய அரசு அதிகாரி முயன்றதாகவும் அதை அமெரிக்கா முறியடித்ததாகவும் செய்தி பரவியது. குர்பத்வந்த் சிங்கை கொல்ல முயன்றதாக வெளியான இந்தத் தகவலை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இந்திய அரசுக்கு நியூயார்க் நீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்பியது. இந்திய அரசு, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் இந்தியத் தொழிலதிபர் நிகில் குப்தா ஆகியோருக்கு இந்தசம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த 21 நாட்களில் இந்த விவகாரத்தில் பதிலளிக்குமாறு நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறும்போது, “அமெரிக்க நீதிமன்றத்தின் சம்மன் தேவையற்றது” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப்.21) முதல் செப்.23வரை அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டுள்ள சூழலில்அமெரிக்க நீதிமன்றம் இந்தியாவுக்கு சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE