அதிஷி அமைச்சரவையில் புதிய அமைச்சராகும் முகேஷ் அஹ்லாவத்: ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு

By KU BUREAU

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ முகேஷ் அஹ்லாவத், டெல்லி முதல்வராக பொறுப்பேற்கவுள்ள அதிஷியின் அமைச்சரவையில் அமைச்சராக பதவியேற்கவுள்ளார். டெல்லியின் சுல்தான்பூர் மஜ்ரா சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவாக இவர் உள்ளார்.

அதிஷி அமைச்சரவையில் நான்கு டெல்லி அமைச்சர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். அதிஷி தலைமையிலான அமைச்சர்கள் குழுவில் கோபால் ராய், கைலாஷ் கெலாட், சவுரப் பரத்வாஜ், இம்ரான் ஹுசைன் ஆகியோர் நீடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது..

டெல்லி அரசாங்கத்தில் கேபினட் அமைச்சராக முகேஷ் அஹ்லாவத் புதிய முகமாக இணைவார் என்று ஆம் ஆத்மி அறிவித்தது. அஹ்லாவத் சுல்தான்பூர் மஜ்ரா சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் 2020 சட்டமன்றத் தேர்தலில் 48,042 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றார். இவர் கட்சியின் தலித் முகமாக உள்ளார்.

முதல்வராக நியமிக்கப்பட்ட அதிஷியும், அவரது அமைச்சரவையும் செப்டம்பர் 21-ம் தேதி பதவியேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜ்ரிவால் செவ்வாய்கிழமை பதவி விலகிய பிறகு, அதிஷி முதல்வராகவுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE