இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, பிறந்து நான்கு மாதங்களே ஆன தனது பேரனுக்கு ரூ. 240 கோடி மதிப்பிலான பங்குகளை பரிசாக அளித்துள்ளார். இது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 0.04 சதவீத பங்குக்கு சமமாகும்.
பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி. கடந்த சில மாதங்களுக்கு முன் ஐடி ஊழியர்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்ற நோக்கில் இவர் பேசிய கருத்து வைரலானது.
இதனைத் தொடர்ந்து இவரின் மனைவி சுதா மூர்த்தி அண்மையில் எம்பி-யாக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த தம்பதியினருக்கு ரோஹன் என்ற மகனும், அஷதா என்ற மகளும் இருக்கின்றனர். அஷதா இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியாவார். ரிஷி - அஷதா தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில், ரோஹனுக்கு கடந்த 2023-ம் ஆண்டு நவம்பரில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு தாத்தா நாராயண மூர்த்தி தனது இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.240 கோடி மதிப்பிலான 0.04 சதவீத பங்குகளை பரிசாக கொடுத்துள்ளார். இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பங்குகளை பெற்றிருக்கும் அந்த நான்கு மாத குழந்தை நாட்டின் இளம் வயது கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
திருமணம் செய்யலைன்னா தற்கொலை செய்துப்பேன்... இளைஞரை மிரட்டிய பெண் கைது!
தொழுகை நடத்திய வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்: 2 பேர் கைது!
அமெரிக்காவால் மூன்றாம் உலகப் போர் உருவாகும்... ரஷ்யா அதிபர் புதின் எச்சரிக்கை!
பார்ட்டிகளில் பாம்பு விஷ போதை... பகீர் கிளப்பிய பிரபல யூடியூபர்!