ராகுல் காந்தியை தீவிரவாதி என்று சொல்வதா? - அமைச்சர் மீது போலீஸில் காங்கிரஸ் புகார்

By KU BUREAU

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை தீவிரவாதி என்று விமர்சித்த மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு மீது காங்கிரஸ் சார்பில்போலீஸில் புகார் அளிக்கப்பட்டுஉள்ளது.

அண்மையில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, சீக்கியர்களின் உரிமைப் போராட்டம் குறித்து பேசினார். ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு பாஜக தலைவர்களும், சீக்கியர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராகுல் காந்தியை இந்தியாவின் நம்பர் 1தீவிரவாதி என்று மத்திய இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு விமர்சித்து இருந்தார். இந்நிலையில் ராகுல் காந்தியை விமர்சித்த மத்திய அமைச்சர்ரவ்நீத் சிங் பிட்டு உள்பட 4 பேர்மீது, காங்கிரஸ் சார்பில் டெல்லிதுக்ளக் சாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரவ்நீத் சிங் பிட்டு, பாஜக மூத்த தலைவர் தர்விந்தர் சிங் மார்வா, சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட், உத்தரபிரதேச மாநில அமைச்சர் ரகுராஜ் சிங் ஆகிய4 பேர் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அல்கா லம்பா உள்ளிட்டோர் இந்த புகார் மனுவை,அளித்துள்ளனர். ரவ்நீத் சிங் பிட்டு உள்ளிட்ட 4 பேரும், ராகுல் காந்தியைதொடர்ந்து விமர்சித்து வருவதாகவும், அவர் மீது வெறுப்பை உமிழும் வகையில் பேசி வருவதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.11 லட்சம் சன்மானம்: உங்கள் பாட்டிக்கு (இந்திரா காந்தி) ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கு ஏற்படும் என்று பாஜக மூத்த தலைவர் தர்விந்தர் சிங் மார்வாவும், ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.11 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட்டும், ராகுல் காந்தி நாட்டின் நம்பர் ஒன் தீவிரவாதி என்று ரகுராஜ் சிங்கும் விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE