பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாள்: குடியரசுத் தலைவர், தலைவர்கள் வாழ்த்து

By KU BUREAU

புதுடெல்லி: குஜராத் முதல்வராக நான்கு முறையும், நாட்டின் பிரதமராக 3-வது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோடி நேற்று தனது 74-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதையொட்டி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மாநிலஆளுநர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள், மாநில முதல்வர்கள்,மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறந்தநாள் வாழ்த்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது, ‘‘பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் ஆளுமை மற்றும் பணியின் மீதான வலிமையால் அசாதாரணமான தலைமைத்துவத்தைக் கொண்ட வர். நாட்டின் செழிப்பையும் மதிப்பையும் உயர்த்தியவர். தேச உணர்வில் நீங்கள் மேற்கொள்ளும் புதுமையான முயற்சிகள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வழி வகுக்கிறது. நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறும்போது, “நாட்டின் பாரம்பரியம் முதல் அறிவியல் வரை அனைத்தையும் ‘புதிய இந்தியா' என்ற பார்வையுடன் இணைத்துள்ளார். தனது வலுவான மன உறுதியுடனும், பொது நலனுக்கான உறுதியுடனும், சாத்தியமற்றதாகத் தோன்றும் பல பணிகளைச் செய்து ஏழைகளின் நலனுக்காக புதிய சாதனைகளைப் படைத்துள்ளார். நாட்டின் பாதுகாப்புக்காக உழைத்து, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வந்த தீர்க்கமான தலைவரை நாடு பெற்றுள்ளது. நாட்டு மக்களின் சுயமரியாதையை அதிகரிப்பதுடன், இந்தியா மீதான உலகளாவிய கண்ணோட்டமும் அவரது தலைமையில் மாறியுள்ளது. கடலின் ஆழத்தில் இருந்து விண்வெளியின் உயரத்திற்கு நாட்டின் கவுரவத்தை உயர்த்திய நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’’ என்றார்.

முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘பிரதமர் நரேந்திர மோடிக்கு எனதுஅன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் தனது மூன்றாவது பதவிக்காலத்தில் இந்தியாவை வெற்றிகரமாக வழிநடத்த வலிமை கிடைக்கட்டும். மேலும் அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க இறை வனை பிரார்த்திக்கிறேன்’’ என்றார்.

ராகுல் காந்தி வாழ்த்து: மக்களவை எதிர்க்கட்சித்தலை வரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் தனது எக்ஸ் தள பதிவில் கூறும்போது, “பிறந்த நாள் வாழ்த்துகள் பிரதமர் நரேந்திர மோடி. நீங்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழவாழ்த்துகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்,பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, காங்கிரஸ் தேசியதலைவர் மல்லிகார்ஜுன கார்கேஉள்ளிட்டோரும் பிரதமருக்குவாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE