40,000 கோடியில் தயாராகிறது புதிய போர்க்கப்பல்! சீனாவுக்கு சவால்விடும் இந்தியா!

By காமதேனு

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை சமாளிக்கும் வகையில் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான புதிய போர்க்கப்பல் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்தியாவிடம் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் உள்ளிட்ட 2 விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன. ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் 262 மீட்டர் நீளம், 59 மீட்டர் உயரம், 62 மீட்டர் அகலம் கொண்டதாகும். இதன் மொத்த எடை 40,000 டன்கள்.

மொத்தம் 14 அடுக்குகள் கொண்ட இந்தக் கப்பலில் 2,300 அறைகள் உள்ளன. கடற்படை அதிகாரிகள், வீரர்கள் என 1,700 பேர் கப்பலில் பயணிக்க முடியும். 34 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அதுபோல், 45 ஆயிரம் டன் எடை கொண்ட ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலில் 26 MiG-29K போர் விமானங்கள், Ka-28 நீர்மூழ்கி எதிர்ப்பு போர் ஹெலிகாப்டர்கள் உட்பட 36 வானூர்திகள் உள்ளன.

எனினும் இவற்றைவிட வலிமையாக ரூ.40,000 கோடி செலவில் இரண்டாவது உள்நாட்டு தயாரிப்பு விமானந்தாங்கி போா்க் கப்பலை கட்டும் முன்மொழிவுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்க உள்ளது. கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் விமானம் தாங்கி கப்பல் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட இருக்கிறது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடைபெறும் பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (டிஏசி) கூட்டத்தில் இதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.


இதையும் வாசிக்கலாமே...

பகீர்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை... சீனாவில் வேகமெடுக்கும் புதிய வகை நோய்!

கனமழை... பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

தொழிலதிபரைக் கடத்திய 2 பேர் என்கவுன்டர்!

சென்னை, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை: நீதிமன்றம் அதிரடி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE