ஜியோ நெட்வொர்க் முடக்கமா? - செல்போன்களில் சிக்னல் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்!

By KU BUREAU

புதுடெல்லி: மும்பை மற்றும் பிற பகுதிகளில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்கள் நெட்வொர்க் செயலிழப்பை சந்தித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஆனால் இதுகுறித்து ரிலையன்ஸ் ஜியோவிடமிருந்து அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வெளியாகவில்லை.

மும்பை மற்றும் பிற பகுதிகளில் உள்ள ஜியோ பயனர்கள் மிகப்பெரிய நெட்வொர்க் செயலிழப்பை எதிர்கொள்கின்றனர். பலருக்கு மொபைல் சேவைக்கான சிக்னல் கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

பிரபல தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்னும் சிக்னல் பிரச்சினையை சரிசெய்யவில்லை என சமூக ஊடகங்களில் அதன் பயனர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொலைதொடர்பு சேவை செயலிழப்பைக் கண்காணிக்கும் வலைத்தளமான டவுன் டிடெக்டரின் தகவல்களின்படி, ஜியோவின் சேவைகள் இன்று அதிகாலையில் இருந்து சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து தற்போது வரை, ரிலையன்ஸ் ஜியோவிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE