மறந்துடாதீங்க... பேடிஎம் ஃபாஸ்டேக்கை செயலிழக்கச் செய்வது எப்படி? சிம்பிளான வழிமுறைகள்!

By S. மைதிலி

பேடிஎம் வங்கியின் முறையற்ற சில நடவடிக்கைகள் ரிசர்வ் வங்கியால் கண்டறிப்பட்டது. அதன் அடிப்படையில் பேடிஎம் வங்கியின் சேவைக்கு ரிசர்வ் வங்கி விதித்த தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால், பேடிஎம் வங்கியால் ரீ-சார்ஜ் செய்வது, வாடிக்கையாளர்கள் செய்யும் டாப்-அப்களை ஏற்க முடியாது. எனினும், இந்தியா முழுவதும் பெரும்பான்மையானோர் பேடிஎம் பாஸ்டேக் மூலமே சுங்க கட்டணம் செலுத்து வருகின்றனர்.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிகையால், பேடிஎம் பாஸ்டேக் பயனர்கள் குழுப்பத்தில் இருந்தனர். இந்நிலையில், பேடிஎம் பயனாளர்களுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, அலகாபாத் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐடிபிஐ வங்கி மற்றும் யெஸ் பேங்க் போன்ற உறுப்பினர் வங்கிகளில் இருந்தும் ஃபாஸ்டேக்குகளை இனி வாங்கலாம். பயனர்கள் தங்களின் வங்கியை மாற்றிக்கொள்ளவும், பாஸ்டேக்கை எப்படி செயலிழக்க செய்வது என்பதை பார்க்கலாம்.

பேடிஎம் பாஸ்டேக் கணக்கை செயலிழக்க செய்வது

• பயனர்கள் தங்களின் ஐடி அல்லது வாலட் ஐடியுடன் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி பாஸ்டேக் போர்ட்டலுக்குள் உள்நுழையவும்

• உங்கள் பாஸ்டேக் எண் மற்றும் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் போன்ற தேவையான விவரங்களை வழங்கி சரிபார்ப்பும்

• போர்ட்டலில் உள்ள சேவைக் கோரிக்கைப் பகுதியில் அல்லது உங்கள் பேடிஎம் செயலியின் 24*7 உதவிப் பிரிவைப் பயன்படுத்தி, ’பாஸ்டேக்’ வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

• உங்கள் பாஸ்டேக்- ஐ செயலிழக்கச் செய்வதற்கான உங்கள் நோக்கத்தைத் தெளிவாகக் கூறி, வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றவும். இதற்கு கூடுதல் தகவல் தேவைப்படலாம்.

• குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் செயலிழக்கம் உறுதிப்படுத்தல் இருந்தால் பேடிஎம்-ஐ பின்தொடர கம்லைண்ட் எண் அல்லது ரெபரண்ஸ் எண்னை எதிர்காலத் தேவைக்கு குறித்துவைத்துக் கொள்ளவும்.

• உங்கள் கணக்குடன் தொடர்புடைய wallet-ஐ மூடுவதற்கு ’Closure Request’ என்பதையோ அல்லது RFID என்ற குறிச்சொல்லையோ தேர்வு செய்யவும்.

தற்போது, உங்களின் பேடிஎம் பாஸ்டேக் கணக்கை செயலிழக்கம் செய்யப்பட்டது. ஒருமுறை செயலிழக்கப்பட்ட, அதே FASTagஐ மீண்டும் செயல்படுத்துவது சாத்தியமில்லை.

பேடிஎம் பாஸ்டேக் கணக்கை வேறு வங்கிக்கு மாற்றுவது எப்படி

உங்கள் Paytm FASTagஐ வேறொரு வங்கிக்கு போர்ட் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, அதில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களைச் சமர்ப்பித்து கட்டணம் செலுத்த வேண்டும். இதன்மூலம் அதே பாஸ்டேக் எண்ணுடன் வேறு வங்கியின் மூலம் கட்டணத்தை செலுத்தலாம். உங்கள் மாற்றுதல் கோரிக்கையை ஏற்றுக்கொண்டவுடன், புதிய வங்கியிலிருந்து உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள். புதிய வங்கிக் கணக்குடன் உங்கள் பாஸ்டேக்-ஐ பயன்படுத்தலாம்.

• பேடிஎம்-லிருந்து உங்கள் பாஸ்டேக்-ஐ அதே எண்ணில் வேறு வங்குக்கு மாற்ற, உங்கள் பாஸ்டேக்-ஐ எந்த வங்கிக்கு மாற்றுகிறீர்களோ அந்த வங்கியின் வாடிக்கையாளர் சேவையை அழைக்கவும்.

• நீங்கள் உங்கள் வங்கியை மாற விரும்புகிறீர்கள் என்று அவர்களிடம் சொல்லவேண்டும்.

• தேவையான விவரங்களைப் பகிர்ந்தவுடன், உங்கள் பரிமாற்றம் செய்யப்படும்.

உங்கள் பாஸ்டேக்-ஐ மாற்ற வேண்டுமா அல்லது செயலிழக்கச் செய்ய வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், உங்கள் பேடிஎம் பாஸ்டேக்க் வாலட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஆன்லைனில் புதிய பாஸ்டேக்கை வாங்குவது எப்படி

My FASTag' பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்து, Buy FASTag விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அதில், பாஸ்டேக்கை வாங்க நீங்கள் அமேசான் அல்லது பிளிப்கார்ட்-க்கு திருப்பி விடப்படுவீர்கள். அங்கு நீங்க்ள் வாங்கும் பாஸ்டேக் உங்களுக்கு டெலிவரி செய்யப்படும்.

புதிய பாஸ்டேக்கை செயல்படுத்த ‘மை பாஸ்டேக் பயன்பாட்டில், ’ஆக்டிவேட் ஃபாஸ்டேக்' என்பதைக் கிளிக் செய்யவும். அதில், அமேசான் அல்லது பிளிப்கார்ட் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யவும். பாஸ்டேக் ஐடி மற்றும் வாகன விவரங்களை உள்ளிட்டால் பாஸ்டேக் செயல்படுத்தப்படும்.

மேலும் நேரடியாக வங்கியிலிருந்தும், தேடிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இணையதளத்தில் அங்கரிக்கப்பட்ட 32 வங்கிகளில் பாஸ்டேக்கை வாங்கலாம். அதேபோல், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடமும் நேரடியாக சென்று பாஸ்டேக்கை வாங்கலாம்.

இதையும் வாசிக்கலாமே...

நெல்லையப்பா் கோயிலில் கோலாகலம்... கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரத் திருவிழா!

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு!

பின்னால் இருந்து தள்ளிவிடப்பட்டாரா மம்தா பானர்ஜி? மருத்துவர்கள் வெளியிட்ட தகவலால் பரபரப்பு!

பயங்கரம்... பள்ளத்தாக்கில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

குறைந்த வட்டி விகிதம்... தங்க நகைக்கடன் வாங்க தங்கமான வங்கி எது?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE