காஷ்மீரில் தீவிரவாதத்தை புதைத்துவிடுவோம்: மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி

By KU BUREAU

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத் துக்கு வரும் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் பாஜக சார்பில் பேரணி, பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் மத்திய அமைச்சர் அமத் ஷா பேசியதாவது: ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தைநாங்கள் ரத்து செய்தோம். இதனால் இங்கு மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்தை மீண்டும் உயிர்ப்பிக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். இங்கு தீவிரவாதத்தை குழிதோண்டி புதைத்துவிடுவோம். அதை மீண்டும் இங்குஉயிர்ப்பிக்க யாருக்கும் துணிவுஇருக்காது.

தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைத்தால் மீண்டும் இங்கு அரசியலைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவைக் கொண்டு வருவோம் என்று சொல்கின்றனர். அந்தப் பிரிவு மீண்டும் கொண்டு வரப்பட வேண்டுமா என்று நீங்கள் (பொதுமக்கள்) சொல்லுங்கள்? காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்குவந்தால், பாஜக ஆட்சியில் பஹாரிகள், குஜ்ஜார் இனத்தவருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு பறிக்கப்படும். இதை மக்கள் நன்றாக நினைவில் கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE