இஸ்ரேலில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு: மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று முகாம்

By KU BUREAU

புதுடெல்லி: பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள் கடந்த 2023 அக்டோபல் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில், 1,200 பேர் உயிரிழந்தனர். இதன்தொடர்ச்சியாக, இஸ்ரேலிய நாட்டில் பணிபுரிந்து வந்த பெரும்பாலான பாலஸ்தீன தொழிலாளர்களின் வேலைக்கான அனுமதியை இஸ்ரேல் ரத்து செய்தது. இதையடுத்து, அங்கு கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.

இந்த இடைவெளியை சரிசெய்வதற்காக 2023 நவம்பரில் இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் தொழிலாளர்களை பணிக்கு தேர்வு செய்து கொள்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக, கட்டுமானம், இரும்பு வளைத்தல், பிளாஸ்டெரிங், செராமிக் டைலிங் உள்ளிட்ட வேலைகளுக்கு இந்திய தொழிலாளர்களை இஸ்ரேல் இன்று தேர்வு செய்ய உள்ளது.

கட்டுமான துறையில் 10,000வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான ஆட்சேர்ப்பு முகாம் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று (செப்.16) தொடங்குகிறது.மேலும், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து சான்றிதழ்களை வைத்திருக்கும் அல்லது குறைந்தபட்சம் 990 மணி நேர வேலையில் பயிற்சியுடன் பராமரிப்புப் படிப்பை முடித்த 5,000 கேர்டேக்கர்களை இந்தியாவிலிருந்து இஸ்ரேல் தேர்ந்தெடுக்க உள்ளது. இஸ்ரேலின் மக்கள்தொகை, குடியேற்றம் மற்றும் எல்லை ஆணைய குழு, அடுத்தவாரம் இந்தியாவுக்கு வந்து திறன் சோதனைகளை நடத்தி பொருத்தமானவர்களை பணிக்கு தேர்வுசெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE