டெல்லி ராம்லீலா மைதானத்தில் மீண்டும் தொடங்கியது விவசாயிகள் போராட்டம்... போக்குவரத்து ஸ்தம்பிப்பு!

By S. மைதிலி

விவசாய உற்பத்தி பொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் இன்று போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.

கடந்த 2020-ம் ஆண்டு வேளாண் சட்டத் திருத்தம் வந்த முதலே விவசாய சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. விளைபொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம், மின்சார சட்டத் திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீதுள்ள வழக்குகள் ரத்து உள்ளிட்டவையே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

ஏற்கெனவே டெல்லி நோக்கி போராட்டம் நடத்திய விவசாயிகளை காவல் துறையினர் எல்லையில் நுழைய அனுமதிக்கவில்லை. அவர்களைக் கட்டுப்படுத்த கான்கிரீட் தடுப்புகள், முள் வளையங்கள் அமைத்து தடுத்தனர். எனினும், விவசாயிகள் சாலையிலேயே உணவு சமைப்பது, கூடாரங்கள் அமைத்து உறங்குவது என போராட்டத்தை நீடித்து வந்தனர். டிராக்டர் ஊர்வலம் நடத்தவும் பஞ்சாப், ஹாரியாணா மாநிலத்தில் இருந்து விவசாயிகள் படையெடுத்து வந்ததால் டெல்லி எல்லை ஸ்தம்பித்தது.

போராட்ட களத்தில் விவசாயிகள்

தடுப்புகளை மீறி நுழைய முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரை பீச்சியடித்தும் காவல் துறையினர் கட்டுப்படுத்தினர். இத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல் துறையினர் சுட்டத்தில் சிலர் உயிரிழந்துள்ளனர். விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக டெல்லி எல்லையில் பதற்றம் நீடித்தது. இதையடித்து, விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய தொடர் போச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்து.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசை ஏற்க வலியுறுத்தி விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்படும் என்ற விவசாயிகள் கூறியதையொட்டி காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் இருந்து இப்போராட்டத்தில் 50,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என காவல் துறை எச்சரித்துள்ளது.

எனவே, நகர வாசிகள் தங்களின் பயணத்தை அதற்கு ஏற்றார்போல் திட்டமிட்டுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், விவசாயிகள் அமைதி போராட்டம் எந்த நிலையிலும் வன்முறையாக மாறாமல் இருக்க காவல்துறை உஷார் நிலையில் உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மாங்கல்ய வரம் தரும் ‘காரடையான் நோன்பு... வழிபடும் முறை... சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

இந்த 23 வகை நாய்களை இனி வீட்டில் வளர்க்கக்கூடாது... மத்திய அரசு அதிரடி உத்தரவு!

வாட்ஸ்-அப் செயலியில் அசத்தலான அப்டேட்... பயனர்கள் மகிழ்ச்சி!

பகீர்... காதலியின் கையைத் துண்டித்த காதலன்: வேறு ஒருவருடன் நிச்சயமானதால் வெறிச்செயல்!

அதிமுகவுடன் தான் கூட்டணியா?...தேமுதிக மீண்டும் பேச்சுவார்த்தை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE