விபத்தில் உயிரிழந்த கேமராமேன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி... முதல்வர் அறிவிப்பு!

By காமதேனு

சாலை விபத்தில் பலியான தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், ரூ.5 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

உயிரிழந்த கேமராமேன் சங்கர்

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “ நங்குநேரி சுங்கச்சாவடி அருகே நேற்று நடந்த சாலை விபத்தில், திருநெல்வேலி மாவட்டம், ஆரைகுளம், முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் (வயது 33) என்பவர், சந்திரயான் விண்கலம் தொடர்பான செய்திக்காக திருவனந்தபுரம் சென்று திருநெல்வேலி திரும்பும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று செய்தியாளர்களுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி உள்ளேன்.

இளம் வயதில் உயிரிழந்த தொலைகாட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE