கர்நாடகாவில் ஒரு பண்ணை வீட்டில் 30-க்கும் மனித மண்டை ஓடுகளை வைத்து நள்ளிரவு பூஜை நடத்தியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், ராமநகரா மாவட்டம், பிடாடி அருகே ஜோகனஹள்ளி கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் நள்ளிரவில் பயங்கரச் சத்தம் கேட்டுள்ளது. அத்துடன் பூஜை செய்யும் சத்தமும், மந்திரங்கள் ஒலிக்கும் சத்தமும் கேட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இந்த சத்தம் அதிகமானது. இதனால் அப்பகுதியில் குடியிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அத்துடன் அந்த பண்ணை வீட்டில் வசித்து வந்த பலராமன் என்பவர் சுடுகாட்டுக்கு நள்ளிரவில் செல்வதையும் பொதுமக்கள் பார்த்து மிரண்டு போனார்கள்.
இதே போல நேற்று நள்ளிரவு அவர் வீட்டில் இருந்து பூஜை செய்யும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அரண்டு போன அப்பகுதி மக்கள், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக அந்த பண்ணை வீட்டிற்கு வந்த போலீஸார், அங்கிருந்த மனித மண்டை ஓடுகளைப் பார்த்து அதிர்ந்து போனார்கள்.
காளி படம், சூலாயுதம் வைத்து குழந்தைகள் முதல் பெரியவர்களின் 30-க்கும் மேற்பட்ட மனித மண்டை ஓடுகள் வைத்து அங்கு பூஜை நடந்திருந்ததால், போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இந்த மண்டை ஓடுகள் எப்படி வந்தது என பாலராமனை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது தனது தாத்தா காலத்தில் இருந்து மண்டை ஓடுகளை வைத்து பூஜை செய்து வருவதாக பலராமன் கூறினார். இதற்காக சுடுகாட்டில் இருந்து மனித மண்டை ஓடுகளைச் சேகரித்து பண்ணை வீட்டில் வைத்து பூஜை செய்ததாக அவர் கூறினார். எதற்காக மண்டை ஓடுகளை வைத்து அவர் பூஜை நடத்தினார், சூனியம் வைப்பதற்காக இந்த பூஜை நடத்தினரா, அல்லது கிராமத்து மக்களை அச்சுறுத்த அவர் பூஜை நடத்தினாரா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பலராமனை கைது செய்த போலீஸார், மனித மண்டை ஓடுகளை அவர் உண்மையில் சுடுகாட்டில் சேமித்தாரா அல்லது அவரால் கொலை செய்யப்பட்டவர்களின் மண்டை ஓடுகளா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், ஜோகனஹள்ளி கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
தத்துவமேதை சாணக்யரின் வம்சமா தோனி ?! வைரலாகும் ஆய்வு முடிவுகள்!
#Oscars2024 | 7 விருதுகளை வென்று மாஸ் காட்டிய ‘ஓப்பன்ஹெய்மர்’!
டிகிரி படித்திருந்தால் போதும்... இந்திய அரசு நிறுவனத்தில் வேலை!
'அனைவரும் பைத்தியமாகி விட்டனர்'... அமைச்சர் உதயநிதி மனைவியின் ஆவேசப் பதிவு!
திண்டுக்கல்லில் ஜோதிமணி, மயிலாடுதுறையில் திருநாவுக்கரசர்?... தொகுதி மாறும் எம்.பி-க்கள்!