மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்

By KU BUREAU

டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார். அவருக்கு வயது 72.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. பலதரப்பட்ட மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இது இந்த நேரத்தில் ஆபத்தானது" என்று தெரிவித்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் யெச்சூரி செயல்பட்டு வருகிறார். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கான தேர்தலில் வெற்றி பெற்று தற்போது மூன்றாவது முறையாக அந்த பொறுப்பை அவர் கவனித்து வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE