கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த மாருதி ஆம்னி வேன் ஒன்று, திடீரென தீ பற்றி எரிந்த நிலையில், சாலையில் ஓடியதால் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் அலறிய அடித்து ஓட்டம்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலங்களாக சாலையில் செல்லும் வாகனங்கள் திடீரென தீ பற்றி எரிவது வாடிக்கையாகி வருகிறது. பெரும்பாலும் மின்சக்தியில் இயக்கப்படும் வாகனங்களில், வாகனத்தின் பேட்டரி வெடித்து இப்படி தீப்பற்றி எரியும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள அம்பலம் சாலையில் சென்று கொண்டிருந்த மாருதி ஆம்னி வேன், திடீரென தீப்பிடித்து எரிந்தது. மளமளவென அசுர வேகத்தில் தீ பரவிய நிலையில், வேனின் ஓட்டுநர், உடனடியாக வாகனத்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார். அதன் பிறகும் எரிந்த நிலையிலேயே வாகனம் சிறிது தூரம் ஓடியது.
இதனைக் கண்ட பொதுமக்களும், பிற வாகன ஓட்டிகளும் அதிர்ச்சியில் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் வேன் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடாய் காட்சியளித்தது. வேன் திடீரென தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று 17 மாவட்டங்களில் கனமழை.. ஆரஞ்சு அலர்ட்... பத்திரமா இருங்க!
உஷார்... இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்… அதிரடி அறிவிப்பு!
புட்லூர் ரயில் நிலையத்தில் பகீர்! மனைவி கண்முன்னே கணவன் கழுத்தறுத்துக் கொலை