பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்!

By காமதேனு

பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அனைத்து மதத்தினரும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை தொடா்பாக நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பொதுசிவில் சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டுவந்தார். மத்திய அரசு பொது சிவில் சட்டம் கொண்டுவரக்கூடாது என்றும், இதற்கான சட்ட முன்வடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. விவாதத்துக்குப் பின் சட்டப்பேரவையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தின் நடைமுறையை, தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE