மாநிலங்களவை எம்.பியை கட்சியிலிருந்து நீக்கினார் நவீன் பட்நாயக்: பாஜகவில் இணைந்தார்!

By KU BUREAU

புவனேஸ்வர்: கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக ராஜ்யசபா எம்பி சுஜீத் குமாரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக பிஜு ஜனதா தளம் கட்சி அறிவித்துள்ளது. இதனையடுத்து சுஜீத் குமார் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

பிஜு ஜனதா தளத்தின் ராஜ்யசபா எம்பி சுஜீத் குமார் 'கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக' கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் இன்று தனது மாநிலங்களவை எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை உடனடியாக ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தங்கர் ஏற்றுக்கொண்டார்.

சுஜீத் குமாரை கட்சியிலிருந்து நீக்கி ஒடிசா முன்னாள் முதல்வரும், பிஜேடி தலைவருமான நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தன்னை ராஜ்யசபாவுக்கு அனுப்பிய கட்சியையும், காலாஹண்டி மாவட்ட மக்களின் நம்பிக்கையையும் அவர் சிதைத்துவிட்டார்" என தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE