இது மோடி ஐடியா... ‘டீப்ஃபேக் வீடியோக்களுக்கு கடிவாளமிடுமா சாட்ஜிபிடி?’

By காமதேனு

டீப்ஃபேக் வீடியோக்களை உருவாக்குவதற்காக செயற்கை நுண்ணறிவு தவறாகப் பயன்படுத்தப்படுவதை கண்டித்திருக்கும் பிரதமர் மோடி, டீப்ஃபேக் முறைகேடுகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஒத்துழைக்குமாறு சாட்ஜிபிடி குழுவினருக்கு அறைகூவல் விடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் மற்றும் கஜோல் ஆகியோரின் மார்பிங் செய்யப்பட்ட டீப்ஃபேக் வீடியோக்களால் பொதுவெளியில் கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன. மூத்த நடிகர் அமிதாப் பச்சன் உட்பட திரையுலகில் பலரும் டீப்ஃபேக் வீடியோக்களுக்கு ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். இதில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டீப்ஃபேக் முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான சட்டப்பிரிவுகள் உருவாக வேண்டும் என்றும் அவர்கள் கோரி வருகின்றனர்.

டீப்ஃபேக் வீடியோக்களால் பாதிக்கப்பட்ட நடிகையர்

அவர்களுக்கு செவி சாய்க்கு வகையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த வாரம் சமூக ஊடக தளங்களுக்கு உரிய ஆலோசனையை வழங்கியது, இது போன்ற டீப்ஃபேக் முறைகேடுகளுக்கு எதிரான சட்ட விதிகள், முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீதும் பாயும் தண்டனைகள் குறித்தும் விளக்கம் அளித்தது. டீப்ஃபேக் வீடியோ மற்றும் புகைப்படங்களை உருவாக்குவோர் மற்றும் மற்றும் புழக்கத்தில் விடுவோருக்கு ரூ1 லட்சம் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்தது.

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான ராஜீவ் சந்திரசேகர், “ஆன்லைன் தளங்களில் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுப்பது சட்டப்பூர்வமான கடமை. அப்படியான வீடியோ மற்றும் புகைப்பட பதிவுகள் சுட்டிக்காட்டப்பட்டால் அடுத்த 36 மணி நேரத்திற்குள் அவற்றை அகற்ற வேண்டும்” என உத்தரவிட்டார்.

சாட்ஜிபிடி

இவற்றின் மத்தியில், டீப்ஃபேக் வீடியோக்களுக்கு எதிராக பிரதமர் மோடி குரல் எழுப்பியிருப்பது, இந்த விவகாரத்தில் மத்திய அரசு மேலும் தீவிரமாக இருப்பதைஉறுதி செய்துள்ளது. டிஜிட்டல் இந்தியாவில் குடிமக்களுக்கான பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதிபூண்டிருப்பதாக பல தருணங்களில் பிரதமர் மோடி பேசி வருவதன் வரிசையில், தற்போது டீப்ஃபேக் வீடியோக்கள் குறித்து தனது கவலையை தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில் பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற தீபாவளி மிலன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி, ”டீப்ஃபேக் குறித்து மக்களுக்கு போதிய விளக்கம் மற்றும் எச்சரிக்கைகளை அளிக்க வேண்டும்” என ஊடகங்களை கேட்டுக்கொண்டார். "செயற்கை நுண்ணறிவு காலத்தில், தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது முக்கியம்" என்றும் அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து ”டீப்ஃபேக் வீடியோக்களை அடையாளம் காண்பது மற்றும் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் உதவுமாறு சாட்ஜிபிடி குழுவினரிடம் கோரியிருப்பதாகவும்” தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... வேர்ல்டு கப் பைனல்... நடிகர் அமிதாப் பச்சனுக்கு தொடர்ந்து மிரட்டல்!

பிக் பாஸ் வீட்டில் ரணகளம்... விசித்ராவுடன் மல்லுக்கட்டிய நிக்ஸன்!

விஜய்சேதுபதி, மஞ்சுவாரியருக்காக புது டெக்னாலஜி... தமிழ் சினிமாவின் அடுத்த பாய்ச்சல்!

வீலிங் செய்து எமனுக்கு காலிங்... டூ வீலரில் இளைஞரின் அட்டகாசம்!

குட் நியூஸ்... இனி புக் செய்த அனைவருக்கும் ரயில் டிக்கெட்; ரயில்வேயின் புதிய திட்டம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE