மகிழ்ச்சி... சிலிண்டர் விலை ₹ 57 குறைவு!

By காமதேனு

வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.57 குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டுப் பயன்பாடு மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்ந்தது. எனினும், கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியதையடுத்து, கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படவில்லை.

இந்நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கியது முதல் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதையடுத்து வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை இம்மாதம் 1 ம் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. அதன்படி 19 கிலோ எடையுள்ள வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.101 உயர்த்தப்பட்டது. அதன் விலை ரூ.1,898-ல் இருந்து, ரூ.1,999-ஆக உயர்ந்தது.

இந்நிலையில், மகிழ்ச்சி செய்தியாக இன்று வணிக சிலிண்டர் விலையை ₹ 57 குறைத்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. வணிக சிலிண்டர் விலை 1999 ல் இருந்து ₹ 57 குறைக்கப்பட்டு 1942 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் ஏதுமின்றி தொடர்ந்து ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE