மேற்குவங்க அமைச்சர் விசாரணைக்கு ஆஜர்: அமலாக்கத்துறை அதிரடி

By KU BUREAU

கொல்கத்தா: பள்ளிகளுக்கான பணிநியமனத்தில் முறைகேடுகள் நடந்த வழக்கில் மேற்கு வங்க அமைச்சர் சந்திரநாத் சின்ஹா ​​இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார்.

மேற்குவங்க சீர்திருத்த நிர்வாக அமைச்சர் சந்திரநாத் சின்ஹாவுக்கு சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதனையடுத்து இன்று காலையில் அவர் கொல்கத்தாவின் சிஜிஓ வளாகத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் பிர்பூம் மாவட்டத்தின் போல்பூரில் உள்ள சந்திரநாத் சின்ஹாவின் இல்லத்தில் அமலாக்கத்துறை மார்ச் மாதம் சோதனை நடத்தியது. அமலாக்கத்துறை சோதனையின் போது சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் மொபைல் போனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE