போராடும் மருத்துவர்களை கசாப்பு கடைக்காரர் என்று சொல்வதா? - திரிணமூல் பெண் எம்எல்ஏவுக்கு பாஜக கண்டனம்

By KU BUREAU

கொல்கத்தா: போராட்டம் நடத்தும் மருத்துவர்களை கசாப்புக் கடைக்காரர்கள் என்று கூறிய திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்எல்ஏவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில்இந்த வழக்கில் நீதி வேண்டி,மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் ஆர்ப்பாட் டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் நடத்தும் மருத்துவர்களை கசாப்புக்கடைக்காரர்கள் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண்எம்எல்ஏ லவ்லி மைத்ரா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “போராட்டம் என்ற பெயரில் கசாப்புக் கடைக்காரர்கள் போல மருத்துவர்கள் மாறி வருகின்றனர். ஏழை மக்களும், ஆதரவுஇல்லாதவர்களும் மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்துசிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளைத் தேடி இங்கு வருகின்றனர். போராட்டத்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை. தனியார் மருத்துவமனைக்கு போக வசதி இல்லாததால்தான் அவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். தகுந்த சிகிச்சை கிடைக்காததால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏலவ்லி மைத்ராவின் இந்தக் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்தெரிவித்துள்ளது. இதுகுறித்துபாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது: போராட்டம் நடத்தும் மருத்துவர்களை, கசாப்புக் கடைக்காரர்கள் என்று எம்எல்ஏ லவ்லி மைத்ரா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவரை கட்சியிலிருந்து ஆளும் திரிணமூல் காங்கிரஸ்நீக்கவேண்டும். அவரது பேச்சு, ஆர்.ஜி.கர் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷுக்கு ஆதரவாக இருப்பது போல் தோன்றுகிறது.

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருக்கும் லவ்லி மைத்ராவின் கணவர், கொல்கத்தாவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். பயிற்சி மருத்துவர்களுக்கு எதிராக நோட்டீஸ்களையும், சம்மன்களையும் கொல்கத்தா போலீஸார் அனுப்பி வருகின்றனர். போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பைக் கொட்டுகிறீர்கள்? இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். இதுதொடர்பாக லவ்லிமைத்ரா கூறும்போது, “மருத்துவர்கள் கடவுள் போன்றவர்கள். ஏழைமக்கள், மருத்துவர்களை கடவுளாகத்தான் பார்க்கின்றனர். நான் அவர்களைத் தவறாக ஏதும் கூறவில்லை” என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE